தேர்தல் ஜுரம் யாரை விட்டுது.. பல்லு போன தாத்தாவில் இருந்து பல்லே முளைக்காத பாப்பா வரை, எல்லோரது பார்வையும் தேர்தல் மீது.. அப்போ நாம மட்டும் ஏன் ஒதுங்கி இருக்கணும். இதோ பதினோரு யோசனைகளுடன் களத்தில் குதிச்சாச்சு..
வேறு எப்பவும் இல்லாதது போல் இப்போ படம் ஓடாத பல நடிகர்கள் பார்ட் டைம் வேளையாக கட்சி ஆரம்பித்து விட்டனர்.. ஆகவே அங்க இருந்தே ஆரம்பிப்போம்..
1. புது படம் ரிலீஸ் அன்று முதல் காட்சிக்கு இலவச டிக்கெட்... இது தற்கால ரசிகர்களையும் பிற்கால தொண்டர்களையும் குசிப்படுத்தும்.
2. பிடித்த முன்னணி நடிகைகளுடன் ஒரு நாள்.. முன்னணி என்று சொல்லி வேலையில்லாமல் இருக்கும் நடிகைகளை இதில் ஈடுபடுத்தலாம். குறை கேட்கும் முகாம் என்ற பெயரில், கட்சி கொடியை தாங்கி ஒரு நாள் ரசிகர்களுடன் கும்மாளமிட வைக்கலாம்.
3. டோர் ஸ்டெப் சரக்கு சர்வீஸ்... பீட்சா முதலானது தொலைபேசியில் அழைத்தால் வீடு தேடி வருவது போல், இந்த திட்டத்தின் மூலம் சரக்கு சப்ளை செய்யலாம். இதன் மூலம் தள்ளாத பெருசுகளும், தண்ணி அடித்து மாமா கிட்ட மாடிக்கொளும் இளசுகளும் பயனடைவர்.
4. மகா தொடர்களின் அடுத்து என்ன அறியும் வசதி.. இதனை பொதுவான வாடிக்கையாளர் சேவை மையத்தை கொண்டு தரலாம். இதன் மூலம் கோடான கோடி பெண்மணிகள் மற்றும் சில ஆண் நண்பர்களும் பயனடைவர். அதிகம் இல்லாட்டி கூட அடுத்த இரண்டு எபிசோடுகளுகான கதை மட்டும் தரலாம்.
5. பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு லைப் லைன் வசதி.. பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் வருவது போல், பரீட்சையில் பதில் தெரியாமல் முழிக்கும் மாணவர்களுக்கு லைப் லைன், நண்பருக்கு கால் செய்து விடை அறியும் வசதி ஆகியன வழங்கலாம். இதன் மூலம் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். பிட் அடித்து மாட்டிக்கொளும் அப்பாவி மாணவர்கள் எண்ணிக்கையும் குறையும். இதன் மூலம் பெற்றோர்களின் ஓட்டு வங்கியை அப்படியே அள்ளலாம்.
6. காதல் நிலையங்கள்.. நாட்டில் இருக்கும் காவல் நிலையங்களை போல் காதல் நிலையங்களை தொடங்கலாம். அரசாங்கமே இப்படி ஒரு திட்டத்தை அறிவித்தால் கலாசார காவலர்களுக்கு வேலையிலாமல் போகும். காதல் தோல்வி சாவுகள் குறையும். எண்ணற்ற காதலர்களின் ஆதரவை பெறலாம்.
7. சந்தனமர வளர்ப்பு திட்டம்... இந்த திட்டத்தின் மூலம் பெருவாரியான விவசாயிகள் பயனடைவர். தங்களின் உற்ப்பத்தி பொருட்களுக்கு இது வரை சரியான விலை கிடைக்காமல் அல்லாடியவர்களுக்கு இது ஒரு ஜாக்பாட். மேலும் சந்தனமர கடத்தலும் இதன் மூலம் தடுக்கப்படும்..
8. அறுவை சிகிச்சைக்கு அவசர கடன்.. இந்த அறிவிப்பு பலருக்கு இன்ப அதிர்ச்சியை தரும். பலவகையான நோய்கள் பெருகிவரும் இந்த காலத்தில் இது ஒரு மாபெரும் திட்டமாக அமையும்.கடன் தள்ளுபடி பற்றி இப்போ ஒன்னும் சொல்ல முடியாது..
9. அரசாங்க அழகு நிலையங்கள்.. ஆள் பாதி ஆடை பாதி.. இதனை மனதில் கொண்டு அனைவருக்கும் மானிய விலையில் அல்லது இலவசமாக இந்த வசதியை தரலாம். இதன் மூலம் அனைவருக்கும் எளிதில் கண்ணாலம் நடக்கும்.
10. அனைத்து இந்திய வேலை உறுதி திட்டம்.. இப்போ நடைபெறும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் பகிர்ந்து அளிக்கலாம். இந்த வேலைக்கே போகாமல் சம்பளம் பெரும் திட்டத்தால் அரசாங்க கஜானாவில் பெரிய ஓட்டை விழுந்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் கிடைக்கும்.
11. For the people By the people... இது திட்டம் இல்லங்க... எல்லார்த்தையும் நாமே சொல்லிட்டா எப்படி, அதுக்காக ஜனநாயக முறைப்படி மக்களே அவங்களுக்காக ஒரு திட்டத்தை உருவாக்கி அரசாங்கத்தின் மூலம் செயல்படுத்தலாம்.
இப்படி பதினோரு யோசனைகளை குடுத்தாச்சு.. நல்லபடியா இத தேர்தல் அறிக்கையாய் குடுக்கும் கட்சி வெற்றிக்கணியை தட்டி பறிக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
பொடியன்....
டெயில்பீஸ்: இந்த பதிவு வெறும் லுல்லுலாயீ பதிவு மட்டுமே.. எந்த ஒரு அரசியல் கட்சியை இழிவுபடுத்தவோ, தனிமனித தாக்குதலோ அல்ல என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.. :)
12:28 AM |
Category: |
5
வாள்வீச்சு
Comments (5)
நகைச்சுவையா எழுதுனதா நீங்க நினைச்சாலும் உண்மையிலேயே நீங்க சொன்னதுல சில பாயிண்டுகள் நாட்டுக்கு தேவை தான்.
சரக்கு ஊத்தி தர ‘தனியா’ ஒரு பெண் குட்டி உண்டா? அப்படினா என் ஓட்டு உங்களுக்குதான்.....
மறுபடி வந்ததுக்கு நன்றி வால்பையன்.. ஒரு வேலை நான் சொன்ன கருத்துக்களில் அது மாதிரி நல்ல விஷயம் இருந்தா தாராளமா அதனை எல்லோருக்கும் அளிக்கலாம்.
கட்சி நான் ஆரம்பிக்கவில்லை ரவிக்குமார் அவர்களே..
இப்படி குட்டி கேட்டால் தாய்குலங்கள் எல்லோரும் என்னை குச்சியால் அடிக்க தயார் ஆகிருவாங்க..
:-) funny