நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வெயிலுக்கு இதமா ஒரு அருமையான ரெசிபி பற்றி கூறினார்.. அதுக்கு பேரு கிரீன் சில்லி வோட்கா என்று நாமகரணம் சூட்டி செய்முறை விளக்கத்தை கீழே அளிக்கிறேன்...
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் 1
சாதா சோடா 100ml
இஞ்சி சாறு 5ml
சர்க்கரை தண்ணீர் 10ml
லெமன் சாறு 10ml
லெமன் ஒரு சிறு பீஸ்
உப்பு சிறிதளவு
Flavor less வோட்கா 60ml.
சாதா சோடா 100ml
இஞ்சி சாறு 5ml
சர்க்கரை தண்ணீர் 10ml
லெமன் சாறு 10ml
லெமன் ஒரு சிறு பீஸ்
உப்பு சிறிதளவு
Flavor less வோட்கா 60ml.
செய்முறை:
முதலில் உப்பை ஒரு தட்டில் தூவவும். சுத்தமான கண்ணாடி கோப்பையை எடுத்து அதன் விளிம்பில் லெமன் பீஸ் கொண்டு தடவி பின் பரவி இருக்கும் உப்பின்மீது கண்ணாடி கோப்பையை தலைகீழாக ஒற்றி எடுக்கவும். இப்பொழுது வோட்காவை அந்த கோப்பையினுள் ஊற்றி இஞ்சி சாறு, இரண்டாக கீறிய பச்சை மிளகாய், சர்க்கரை தண்ணீர், லெமன் சாறு சேர்த்து கடைசியாக சோடாவை சேர்க்கவும்.
இப்போ உங்க கையில் 200ml அருமையான மற்றும் குளுமையான கிரீன் சில்லி வோட்கா ரெடி.
பொடியன்...
இப்போ உங்க கையில் 200ml அருமையான மற்றும் குளுமையான கிரீன் சில்லி வோட்கா ரெடி.
பொடியன்...
11:22 AM |
Category: |
8
வாள்வீச்சு
Comments (8)
yar mel intha kolai weri?
மப்பு கும்முன்னு இருக்குமா!
இது போல காக்டெயில் ரெபிச்சி இருந்தாலும் சொல்லுங்க
சும்மா தண்ணி கலந்து அடிச்சி போரடிக்குது!
வணக்கம் தூயா..
உங்களை இந்த சிறியவனின் தளத்தில் எதிர்பார்க்கவில்லை.. வருகைக்கு மிக்க நன்றி..
கொலை வெறி என்று ஒன்னும் இல்லை.. எத்தனை நாள் தான் பழச்சாறு, உணவு என்று போவது... இது சும்மா ஒரு வரைட்டி.. அவளோதான்..
வணக்கம் வால்ப்பையன்
உங்களை முதல் பதிவிலேயே எதிர்பார்த்தேன்... மப்பு எப்படி இருக்கு என்று சனிக்கிழமை சோதிச்சு பார்த்து சொல்லுங்க.. நிச்சயமா இது சோதனைக்கு பின்பு தான் வலையேற்றப்பட்டுள்ளது..
இன்னமும் நிறையா ஐட்டம் கைவசம் இருக்கு.. அடிக்கடி வாங்க தேவையான எடுத்துக்குங்க.
:)
இந்த சண்டே டிரைப் பண்ணி பார்க்கிறேன்... பொடிப்பையன்420
நல்லபடியா ட்ரை செஞ்சு பாருங்க... ஆனா எதுக்கும் முதல் சிப்பை நண்பருக்கு அளித்து சோதித்து பார்க்கவும்..
தமிழன்-கறுப்பி
இப்படி ஒண்ணுமே சொல்லாம போனா எப்படி??