கோவணத்துல ஒரு காசு இருந்தா.... என்ற பழமொழி தான் நினைக்க தோணுதுங்க... என்னவா.... தற்போது வளர்ந்து வரும் வருங்கால சூப்பர் ஸ்டார், எட்டாவது வள்ளல் தனது அடுத்த அடுத்த திட்டத்தை அறிவித்துள்ளார்...
அதாவது அவருக்கு என்று உலகம் முழுக்க ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கும் பணி.. ஆகவே நூறு பேர் கொண்ட குழுவா அவரை அணுகி ரசிகர் மன்றத்தை பதிவு செஞ்சுக்கிட்டா ருபாய் ஐந்து லட்சத்தை சுட சுட கைல குடுத்து திக்குமுக்காட வைகிறாராம். எதுக்கா? பின்ன மன்ற செலவுகளை கவனிக்க தான்.
அதோடு நில்லாமல் தனது ஒவ்வொரு பட ரிலீஸ் அன்றும் கோசம் போடும் கும்பலுக்கு ஸ்பெஷல் கவனிப்பு வேறு...
அரசியல் வாய்ப்பு பிரகாசமா இருப்பதால் தான் இந்த தடபுடல் ஏற்பாடு என்று இந்த செய்தியை சொன்ன நம்ம காரைக்குடி அண்ணாச்சி, ரசிகர் மன்ற திறப்பு வேளையில் ஐக்கியமானார்....
பொடியன்...
10:17 PM |
Category: |
தேர்தல் ஜுரம் யாரை விட்டுது.. பல்லு போன தாத்தாவில் இருந்து பல்லே முளைக்காத பாப்பா வரை, எல்லோரது பார்வையும் தேர்தல் மீது.. அப்போ நாம மட்டும் ஏன் ஒதுங்கி இருக்கணும். இதோ பதினோரு யோசனைகளுடன் களத்தில் குதிச்சாச்சு..
வேறு எப்பவும் இல்லாதது போல் இப்போ படம் ஓடாத பல நடிகர்கள் பார்ட் டைம் வேளையாக கட்சி ஆரம்பித்து விட்டனர்.. ஆகவே அங்க இருந்தே ஆரம்பிப்போம்..
1. புது படம் ரிலீஸ் அன்று முதல் காட்சிக்கு இலவச டிக்கெட்... இது தற்கால ரசிகர்களையும் பிற்கால தொண்டர்களையும் குசிப்படுத்தும்.
2. பிடித்த முன்னணி நடிகைகளுடன் ஒரு நாள்.. முன்னணி என்று சொல்லி வேலையில்லாமல் இருக்கும் நடிகைகளை இதில் ஈடுபடுத்தலாம். குறை கேட்கும் முகாம் என்ற பெயரில், கட்சி கொடியை தாங்கி ஒரு நாள் ரசிகர்களுடன் கும்மாளமிட வைக்கலாம்.
3. டோர் ஸ்டெப் சரக்கு சர்வீஸ்... பீட்சா முதலானது தொலைபேசியில் அழைத்தால் வீடு தேடி வருவது போல், இந்த திட்டத்தின் மூலம் சரக்கு சப்ளை செய்யலாம். இதன் மூலம் தள்ளாத பெருசுகளும், தண்ணி அடித்து மாமா கிட்ட மாடிக்கொளும் இளசுகளும் பயனடைவர்.
4. மகா தொடர்களின் அடுத்து என்ன அறியும் வசதி.. இதனை பொதுவான வாடிக்கையாளர் சேவை மையத்தை கொண்டு தரலாம். இதன் மூலம் கோடான கோடி பெண்மணிகள் மற்றும் சில ஆண் நண்பர்களும் பயனடைவர். அதிகம் இல்லாட்டி கூட அடுத்த இரண்டு எபிசோடுகளுகான கதை மட்டும் தரலாம்.
5. பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு லைப் லைன் வசதி.. பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் வருவது போல், பரீட்சையில் பதில் தெரியாமல் முழிக்கும் மாணவர்களுக்கு லைப் லைன், நண்பருக்கு கால் செய்து விடை அறியும் வசதி ஆகியன வழங்கலாம். இதன் மூலம் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். பிட் அடித்து மாட்டிக்கொளும் அப்பாவி மாணவர்கள் எண்ணிக்கையும் குறையும். இதன் மூலம் பெற்றோர்களின் ஓட்டு வங்கியை அப்படியே அள்ளலாம்.
6. காதல் நிலையங்கள்.. நாட்டில் இருக்கும் காவல் நிலையங்களை போல் காதல் நிலையங்களை தொடங்கலாம். அரசாங்கமே இப்படி ஒரு திட்டத்தை அறிவித்தால் கலாசார காவலர்களுக்கு வேலையிலாமல் போகும். காதல் தோல்வி சாவுகள் குறையும். எண்ணற்ற காதலர்களின் ஆதரவை பெறலாம்.
7. சந்தனமர வளர்ப்பு திட்டம்... இந்த திட்டத்தின் மூலம் பெருவாரியான விவசாயிகள் பயனடைவர். தங்களின் உற்ப்பத்தி பொருட்களுக்கு இது வரை சரியான விலை கிடைக்காமல் அல்லாடியவர்களுக்கு இது ஒரு ஜாக்பாட். மேலும் சந்தனமர கடத்தலும் இதன் மூலம் தடுக்கப்படும்..
8. அறுவை சிகிச்சைக்கு அவசர கடன்.. இந்த அறிவிப்பு பலருக்கு இன்ப அதிர்ச்சியை தரும். பலவகையான நோய்கள் பெருகிவரும் இந்த காலத்தில் இது ஒரு மாபெரும் திட்டமாக அமையும்.கடன் தள்ளுபடி பற்றி இப்போ ஒன்னும் சொல்ல முடியாது..
9. அரசாங்க அழகு நிலையங்கள்.. ஆள் பாதி ஆடை பாதி.. இதனை மனதில் கொண்டு அனைவருக்கும் மானிய விலையில் அல்லது இலவசமாக இந்த வசதியை தரலாம். இதன் மூலம் அனைவருக்கும் எளிதில் கண்ணாலம் நடக்கும்.
10. அனைத்து இந்திய வேலை உறுதி திட்டம்.. இப்போ நடைபெறும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் பகிர்ந்து அளிக்கலாம். இந்த வேலைக்கே போகாமல் சம்பளம் பெரும் திட்டத்தால் அரசாங்க கஜானாவில் பெரிய ஓட்டை விழுந்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் கிடைக்கும்.
11. For the people By the people... இது திட்டம் இல்லங்க... எல்லார்த்தையும் நாமே சொல்லிட்டா எப்படி, அதுக்காக ஜனநாயக முறைப்படி மக்களே அவங்களுக்காக ஒரு திட்டத்தை உருவாக்கி அரசாங்கத்தின் மூலம் செயல்படுத்தலாம்.
இப்படி பதினோரு யோசனைகளை குடுத்தாச்சு.. நல்லபடியா இத தேர்தல் அறிக்கையாய் குடுக்கும் கட்சி வெற்றிக்கணியை தட்டி பறிக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
பொடியன்....
டெயில்பீஸ்: இந்த பதிவு வெறும் லுல்லுலாயீ பதிவு மட்டுமே.. எந்த ஒரு அரசியல் கட்சியை இழிவுபடுத்தவோ, தனிமனித தாக்குதலோ அல்ல என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.. :)
12:28 AM |
Category: |
சில்லி வோட்காநண்பருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வெயிலுக்கு இதமா ஒரு அருமையான ரெசிபி பற்றி கூறினார்.. அதுக்கு பேரு கிரீன் சில்லி வோட்கா என்று நாமகரணம் சூட்டி செய்முறை விளக்கத்தை கீழே அளிக்கிறேன்...
தேவையான பொருட்கள்பச்சை மிளகாய் 1
சாதா சோடா 100ml
இஞ்சி சாறு 5ml
சர்க்கரை தண்ணீர் 10ml
லெமன் சாறு 10ml
லெமன் ஒரு சிறு பீஸ்
உப்பு சிறிதளவு
Flavor less வோட்கா 60ml.
செய்முறை:முதலில் உப்பை ஒரு தட்டில் தூவவும். சுத்தமான கண்ணாடி கோப்பையை எடுத்து அதன் விளிம்பில் லெமன் பீஸ் கொண்டு தடவி பின் பரவி இருக்கும் உப்பின்மீது கண்ணாடி கோப்பையை தலைகீழாக ஒற்றி எடுக்கவும். இப்பொழுது வோட்காவை அந்த கோப்பையினுள் ஊற்றி இஞ்சி சாறு, இரண்டாக கீறிய பச்சை மிளகாய், சர்க்கரை தண்ணீர், லெமன் சாறு சேர்த்து கடைசியாக சோடாவை சேர்க்கவும்.
இப்போ உங்க கையில் 200ml அருமையான மற்றும் குளுமையான கிரீன் சில்லி வோட்கா ரெடி.
பொடியன்...
11:22 AM |
Category: |
இன்று அருமை தங்கை தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பதை பார்த்து சூரியன் மேகங்களுக்கு பின் ஓடி ஒளிந்த்துள்ளது.. வை.கோ
பொடியன்: நடக்கவே நடக்காது என நினைத்த காரியம் அல்லது செயல் நடந்தா கூட மழை வரும்னு சொல்றாங்களே...
காந்தி ஜெயந்தி அன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை.... நடைமுறை.
பொடியன்: சரக்குலகின் மன்னன் விஜய் மல்லையா காந்தியின் உடைமைகளை ஏலத்தில் எடுத்து இந்தியாவின் இறையாண்மையை, மானத்தை காத்தார்.. இது நடந்தது.
----------------------------------------------------------------------------------------------------------------------
இது பழைய செய்தி தான். இருந்தாலும் பரவாயில்ல நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். 'கடமையை செய், பலனை எதிர்பார்' என்று இருக்கு ஆனா இல்ல, என்று இருக்கும் அவரது கட்சி இல்ல இல்ல ரசிகர் மன்றத்துக்கு சொல்லிட்டு போனார் உச்ச நடிகர்.....
அப்போ தந்தை மகனுக்கு செய்ய வேண்டிய கடமை, மகன் தாய்க்கு செய்ய வேண்டிய கடமை, மக்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமை, அரசன் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை, காவலர்கள் சட்டத்துக்கு செய்யவேண்டிய கடமை இப்படி இருக்க அனைத்து கடமைக்கும் எதிர்பார்கவேண்டிய பலன் அளவு எப்படி என்று சொல்லிட்டு போயிருந்தா இன்னும் நல்லா இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
டெயில்பீஸ் : தமிழ்படங்களில் வரும் கடவுளுக்கும், சீருடை போட்ட காவலர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.... அது என்னான்னு தெரிஞ்சா பின்னூட்டமா போட்டுட்டு போங்க அன்பு நெஞ்சங்களே....
4:18 PM |
Category: |
வணக்கம் அன்பு உள்ளங்களே..
இன்று முதல் இந்த வலைபூ ஆரம்பம். ஆரம்ப விழாவுக்கு எல்லோருக்கும் விருந்து வைக்கணும். ஆகையால் பேருக்கு எத்த மாதிரி ஏதும் மேட்டர் போன்றதுதான் சரி. ஆகையால்...
ஆர்வக்கோளாறு ஆர்வக்கோளாறு அப்படின்னு ஒரு மேட்டர் இருக்கு.. அது எப்படி வெளிப்படும் என்று, மேல உள்ள படம் இடம்பெரும் படம், நண்பர்கள் புடைசூழ பார்க்கும் போது தெரிஞ்சது.. சரியா அந்த ஓவியம் வரையர காட்சி வரும்போது கலாசார காவலர்கள் கைவைத்தது கூட தெரியாமல், புயல் வேகத்துல நண்பன் ஒருவன் எட்டிப்பார்த்த வேகம் இருக்கே... பக்கத்தில் இருந்த நானே அப்படியே ஷாக் ஆகிட்டேன்...
என் கையில் இருந்த பாப்கார்ன் தெறித்து முன்சீட்டில் அமர்ந்திருந்த பெண் மீது விழவும் என் நண்பன் எட்டிப்பார்க்கவும் சரியாக இருந்தது.. அந்த பெண்மணி எங்களை முறைப்பதை கூட கண்டுக்காம, 'மச்சி இந்த ஸ்க்ரீன் சிறுசு போல' என்று நண்பன் சொன்னதைகேட்டு அங்கு எழுந்த சிரிப்பொலி... இதுக்கு மேல தாங்காது என்று இருட்டோட இருட்டா எந்திருச்சு ஓடியாந்தோம்.
8:54 PM |
Category: |