ரொம்ப மாசம் ஆச்சு நம்ம பதிவு பக்கம் வந்து. லேட்ஆ வந்தாலும் சும்மா அதிரடியா வரணும். அதுக்கு தான் இப்படி...இந்த வருஷம் முடியதுக்குள்ள ஒரு பதிவாவது போட்டுடனும்னு ரொம்ப முயற்சி செஞ்சு, மல்லாக்க படுத்து, இல்லாத அறிவை அலசி, ஒரு மேட்டர் புடிசுட்டோம்ல.
சரி பதிவுக்கு வருவோம். ஹீரோ ஆகணும்னா என்ன வேணும்?
முதலில்,
1. நல்ல வில்லன் வேணும். என்னதான் தில்லாலங்கடி வில்லனா இருந்தாலும், கடைசீயா தோத்து போகணும்.
2. சும்மா தக தகன்னு, சுண்டுனா ரத்தம் வர்றமாதிரி, ஒரு சின்ன பொண்ண புடிச்சு ஹீரோயின் ரோல்ல போடணும்.
3. 'நீ போட்டா கேசு, நான் போட்டா பீசு' இப்படி நாலு இல்ல அஞ்சு மீனிங் ஒண்ணா வச்சு டைலாக் எழுதுற ரைட்டர் வேணும்.
4. கிட்ட பார்த்தா, மழை பேஞ்சு, நஞ்சு போன தார் ரோடு மாதிரி இருக்க மூஞ்சியை, பேட்ச் வொர்க் செஞ்சு, மொசைக் தரை மாதிரி தெரிய வைக்கிற மேக்கப் ஆள் வேணும்.
5. டான்ஸ் ஆட வராது. இருந்தும் காமராவை போட்டு ஆட்டுற ஆட்டுல சும்மா அரங்கமே அதிரனும். அப்படி ஒரு காமரா மேன் வேணும்.
6. நெஜத்துல பொண்ணுகளை உத்து பார்க்கவே வெக்கப்படுற ஆளு. ஆனா கண்டபடி கசா முசா செய்ய மட்டும், கனவு சீன் வைக்கிற மாதிரி நல்ல டைரக்டர் வேணும்.
7. திஸ்ஸு பேப்பர் இல்லையினா, ஆயிரம் ரூவா நோட்டை எடுத்து வாயை துடைக்கும் தாரள மனசு தயாரிப்பாளர் வேணும்.
8. நம்ம மூச்சு காத்தை கூட எண்ணிடலாம், ஆனா அவங்க போடுற விளம்பரத்தை மட்டும் என்னவே முடியாது. அப்படி விளம்பரத்துக்கு பயந்து தியேட்டர்ல போய் அடைக்கலம் தேடனும். எப்படியோ படம் ஓடுதில்ல, அப்போ மிக முக்கியம் Sun Picutres வசம் விநியோக உரிமை குடுக்கணும்.
இப்படி எல்லாமே அவங்க செஞ்சா நமக்கு வேலை? கையில சிந்தின தேனை நக்கி பார்க்க காசு குடுக்குறாங்க. அதுவும் எல்லோரையும் விட அதிகமா. அத அமுக்கமா வாங்கிக்கிட்டு , நாலு பஞ்ச் டயலாக் பேசினோமா, சந்தடி சாக்குல ஏதாவது அரசியல் கட்சியை சொரிஞ்சு விட்டோமா, MP ஆனோமானு வாழ்க்கைய ஓட்டிட்டு போய்டே இருக்கனும்.
அவ்வளவுதாங்க.
1:20 PM |
Category:
லுல்லுலாயி
|
0
வாள்வீச்சு
Comments (0)