அன்புள்ள
அட்டாக் பாண்டிக்கு....

உன்னோட அன்பு நண்பன் திகில் தீச்சட்டிவாயன் எழுதிக்கொள்வது... நீ எப்படி இருக்க.. நான் இங்க சுகமா இருக்கேன்... தொழில் எதுவும் இல்லமா, டீ கடைல இருக்க தினத்தந்தி பேப்பர் தீஞ்சு போற அளவு படிக்கிரியமே... இப்படியே இன்னும் எத்தனை நாள்... பொழப்ப ஓட்ட இப்போ பல வழி இருக்காம். எல்லாம் ரொம்ப சுளுவான மேட்டர் தான். ஒன்னொன்னா சொல்றேன் கேட்டுக்கோ...


ஒவ்வொரு ஏரியாவிலும் பொழப்பு இல்லாம சுத்துற விசிலடிச்சான் குஞ்சுகள் இருப்பாங்க.. மொதோவேலையா அவங்கள தேடிப்புடி... தனியா போய் மிதி வாங்குவதற்கும், ஒரு குரூப் போய் மிதி வாங்குவதற்கும் நிறையா வித்யாசம் இருக்கு. அடுத்து அதே ஊருக்குள்ள ஒன்னுக்கு போறவன் ஒதுங்குற இடத்துல எப்படியும் அனாதையா ஒரு குடோன் இருக்கும். காத்து கூட வராத இடமா கூட இருக்கலாம். ஆனா நமக்கு கொள்கை தான் முக்கியம். இப்போ உனக்கு ஒரு இடம் ஆச்சு... அடுத்து கருமாதிக்கு கூட பத்திரிக்கை அடிக்க எவனுமே சீண்டாத அச்சகத்தை அல்வா குடுத்து அமுக்கு...

இப்போ ஓரளவு எல்லாம் தயார். ஆனா கொள்கை... இருக்கவே இருக்கு பல இஸம்.. அதான் தோழரே, ச்சே நண்பரே... கம்யுனிசம், சோசியலிசம், செக்கிலுகுற இஸம் இப்படி... இதில் எதுனா ஒன்ன உன்னோட கொள்கையா வச்சுக்கோ.. அலறாத பாண்டி, இதெல்லாம் அடுத்தவனுக்கு தான். இப்போ அமைப்பு, அலுவலகம், கொள்கை எல்லாமே தயார். அடுத்து கண்ணாடி வீடா பார்த்து கல் அடிக்கிற வேலை தான். இப்போ அம்பது ரூவா போட்டா அழகழகா நெம்பர் தர்றான். அதுல ரெண்டு வாங்கி வச்சுக்கோ. சத்தியமா அடுத்தவன் பேருல தான்.

இப்போ அட்டாக் வேலை ஆரம்பம். என்னதான் திராவிட கட்சிகளுக்கு கழுவி விட்டு (காலை தான்) பொழப்ப நடத்தினாலும் நம்ம கொள்கையால தான் உலகமே உசிரோட இருக்கு. ஒபமா அட்சி கூட நாங்க போட்ட பிச்சை. ஒசாமா எது செஞ்சாலும் எங்கள கேக்காம செய்யிறது இல்ல... சூரியன் உதிக்கிறது கூட நாங்க கை காட்டின திசையில்தான். அப்படி இப்படி நாலு வார்த்தையை போட்டு கிறுக்கி அதை நோட்டீஸ் போட்டு சுண்டல் விக்கிறவங்க கிட்ட குடுக்காம மத்த ஆளுங்க கிட்ட குடு.

நம்ம நாட்டுல இலுச்சவாயன் தமிழன் தான். எந்த ஊரு காரன் வந்து நம்ம ஊருக்காரன் வேட்டிய உருவினாலும் சரி கோவணத்தை உருவினாலும் சரி, அவன் தன்மானக்காரன் அதான் அப்படி செஞ்சான். இது மாதிரி நம்ம ஊர்காரன் எப்போ உருவ போறான் என்று சும்மா திகிலா நாலே நாலு போஸ்டர் அடிச்சு ஊரே தூங்கினதுக்கு பொறவு எங்கயாச்சும் கொண்டு ஒட்டிடு. அந்த போஸ்டர கழுதை கூட நெருங்க பயப்படும். அப்புறமா நீயே போய் அத தாறுமாற கிழிச்சு, நமக்கு பயந்தவன் எவனோ நடுராத்திரியில வந்து போஸ்டரை கிழிச்சுட்டான் என்று இன்னொரு போஸ்டர் அடிச்சு ஒட்டு.

அதே மாதிரி எங்க எவன் எது செஞ்சாலும், அது நல்லதோ கெட்டதோ அதுக்கு எதிரா அறிக்கை அடி. அப்போ தான் ஊருக்குள்ள எவனும் நம்ம அறிவுக்கு சமமா இல்ல என்று ஒரு சீன் போட முடியும். அப்படியே அந்த அறுவை இல்ல இல்ல அறிக்கை எல்லாம் ஒன்னு சேர்த்து ஒரு பத்திரிக்கை போடு... பத்திரிக்கையோட பேரு வெடிகுண்டு, ஆட்டம் பாம் இப்படி இருந்தா மேலும் சிறப்பு.

அறிக்கை என்ற பேருல சொறிஞ்சு விடுறவனுக்கு அரடிக்கெட், ஆப்பாயில், அழுகிப்போன முட்டை இப்படி பேரு வச்சா ரொம்ப சிறப்பா இருக்கும். அறிக்கையோட முடிவுல இது சம்பந்தப்பட்டவங்களுக்கு நாங்கள் குடுக்கும் மரண இடி... என்று மறக்காம சொல்லி கலகம் இல்ல இல்ல காமெடி பண்ணனும்.

தப்பி தவறி அந்த பத்திரிகைய காசுக்கு என்று சொல்லிராத.. அப்புறம் வர்றவன் போறவன் எல்லாம் கல்ல விட்டு அடிப்பான். ஆகவே இலவசமா குடுக்கணும். (குழந்தைக கக்கூஸ் போனா கண்டிப்பா நம்ம பத்திரிக்கைய தான் பயன் படுத்தனும் என்று பெருமையா கூட சொல்லிக்கலாம்).

இப்படி எல்லாம் செஞ்சா சீக்கிரம் நீயும் பெரிய மனுஷன் ஆகிடுவ. அப்புறம் 2011ல் அட்சி நமதே என்று கூட சந்தோசமா சொல்லிக்கலாம். என்ன நடந்தாலும் உன் நண்பனை மட்டும் மறந்துடாத. சீகிரமே என்ன பார்க்க வந்திடு.

இப்படிக்கு...
உனக்காக சுடுகாட்டில் குழி வெட்டி, நரகத்தில் இடம் பிடித்து காத்திருக்கும்...

திகில் தீச்சட்டிவாயன்.


Comments (8)

On 4/10/09, 5:25 PM , உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

 
On 4/10/09, 6:09 PM , Anonymous said...

///அரடிக்கெட், ஆப்பாயில், அழுகிப்போன முட்டை இப்படி பேரு //

ஏப்பா பொடியன் இவங்க எல்லா பெரிய ஆளுங்க

காவல் துறை மரண அடி குடுப்பாங்களா?

 
On 4/10/09, 7:00 PM , பொடியன் said...

அனானி நண்பரே நானோ ஒரு பொடியன். என்ன இப்படி கோர்த்து விடறீங்களே...

அடி விழுந்ததுக்கு அப்புறமா தான் தெரியும் சத்தம் எந்த பக்கம் இருந்து வருது என்று...

 
On 4/10/09, 7:47 PM , Anonymous said...

கலக்கல்!

 
On 4/11/09, 8:52 AM , Anonymous said...

நல்லா இருக்க ஆசை இல்லையா? போடப் போராங்கோ......

 
On 4/11/09, 11:34 PM , பொடியன் said...

நன்றி கவின்...

 
On 4/11/09, 11:36 PM , பொடியன் said...

புகழினி ஆனாலும் உங்க காமடிக்கு அளவே இல்லை.... சொன்னது தான் சொன்னீங்க... யாரு யாரை என்று சொல்லாம விட்டுடீங்களே... ;)

 
On 6/19/09, 8:56 PM , தினேஷ் said...

//உனக்காக சுடுகாட்டில் குழி வெட்டி, நரகத்தில் இடம் பிடித்து காத்திருக்கும்...//

ரெடி ஆயிட்டிங்க போல ..