ரொம்ப
மாசம் ஆச்சு நம்ம பதிவு பக்கம் வந்து. லேட் வந்தாலும் சும்மா அதிரடியா வரணும். அதுக்கு தான் இப்படி...இந்த வருஷம் முடியதுக்குள்ள ஒரு பதிவாவது போட்டுடனும்னு ரொம்ப முயற்சி செஞ்சு, மல்லாக்க படுத்து, இல்லாத அறிவை அலசி, ஒரு மேட்டர் புடிசுட்டோம்ல.

சரி பதிவுக்கு வருவோம். ஹீரோ ஆகணும்னா என்ன வேணும்?

முதலில்,

1. நல்ல வில்லன் வேணும். என்னதான் தில்லாலங்கடி வில்லனா இருந்தாலும், கடைசீயா தோத்து போகணும்.

2.
சும்மா தக தகன்னு, சுண்டுனா ரத்தம் வர்றமாதிரி, ஒரு சின்ன பொண்ண புடிச்சு ஹீரோயின் ரோல்ல போடணும்.

3. '
நீ போட்டா கேசு, நான் போட்டா பீசு' இப்படி நாலு இல்ல அஞ்சு மீனிங் ஒண்ணா வச்சு டைலாக் எழுதுற ரைட்டர் வேணும்.

4.
கிட்ட பார்த்தா, மழை பேஞ்சு, நஞ்சு போன தார் ரோடு மாதிரி இருக்க மூஞ்சியை, பேட்ச் வொர்க் செஞ்சு, மொசைக் தரை மாதிரி தெரிய வைக்கிற மேக்கப் ஆள் வேணும்.

5.
டான்ஸ் ஆட வராது. இருந்தும் காமராவை போட்டு ஆட்டுற ஆட்டுல சும்மா அரங்கமே அதிரனும். அப்படி ஒரு காமரா மேன் வேணும்.

6.
நெஜத்துல பொண்ணுகளை உத்து பார்க்கவே வெக்கப்படுற ஆளு. ஆனா கண்டபடி கசா முசா செய்ய மட்டும், கனவு சீன் வைக்கிற மாதிரி நல்ல டைரக்டர் வேணும்.

7.
திஸ்ஸு பேப்பர் இல்லையினா, ஆயிரம் ரூவா நோட்டை எடுத்து வாயை துடைக்கும் தாரள மனசு தயாரிப்பாளர் வேணும்.

8.
நம்ம மூச்சு காத்தை கூட எண்ணிடலாம், ஆனா அவங்க போடுற விளம்பரத்தை மட்டும் என்னவே முடியாது. அப்படி விளம்பரத்துக்கு பயந்து தியேட்டர் போய் அடைக்கலம் தேடனும். எப்படியோ படம் ஓடுதில்ல, அப்போ மிக முக்கியம் Sun Picutres வசம் விநியோக உரிமை குடுக்கணும்.

இப்படி எல்லாமே அவங்க செஞ்சா நமக்கு வேலை? கையில சிந்தின தேனை நக்கி பார்க்க காசு குடுக்குறாங்க. அதுவும் எல்லோரையும் விட அதிகமா. அத அமுக்கமா வாங்கிக்கிட்டு , நாலு பஞ்ச் டயலாக் பேசினோமா, சந்தடி சாக்குல ஏதாவது அரசியல் கட்சியை சொரிஞ்சு விட்டோமா, MP ஆனோமானு வாழ்க்கைய ஓட்டிட்டு போய்டே இருக்கனும்.

அவ்வளவுதாங்க.




அன்புள்ள
அட்டாக் பாண்டிக்கு....

உன்னோட அன்பு நண்பன் திகில் தீச்சட்டிவாயன் எழுதிக்கொள்வது... நீ எப்படி இருக்க.. நான் இங்க சுகமா இருக்கேன்... தொழில் எதுவும் இல்லமா, டீ கடைல இருக்க தினத்தந்தி பேப்பர் தீஞ்சு போற அளவு படிக்கிரியமே... இப்படியே இன்னும் எத்தனை நாள்... பொழப்ப ஓட்ட இப்போ பல வழி இருக்காம். எல்லாம் ரொம்ப சுளுவான மேட்டர் தான். ஒன்னொன்னா சொல்றேன் கேட்டுக்கோ...


ஒவ்வொரு ஏரியாவிலும் பொழப்பு இல்லாம சுத்துற விசிலடிச்சான் குஞ்சுகள் இருப்பாங்க.. மொதோவேலையா அவங்கள தேடிப்புடி... தனியா போய் மிதி வாங்குவதற்கும், ஒரு குரூப் போய் மிதி வாங்குவதற்கும் நிறையா வித்யாசம் இருக்கு. அடுத்து அதே ஊருக்குள்ள ஒன்னுக்கு போறவன் ஒதுங்குற இடத்துல எப்படியும் அனாதையா ஒரு குடோன் இருக்கும். காத்து கூட வராத இடமா கூட இருக்கலாம். ஆனா நமக்கு கொள்கை தான் முக்கியம். இப்போ உனக்கு ஒரு இடம் ஆச்சு... அடுத்து கருமாதிக்கு கூட பத்திரிக்கை அடிக்க எவனுமே சீண்டாத அச்சகத்தை அல்வா குடுத்து அமுக்கு...

இப்போ ஓரளவு எல்லாம் தயார். ஆனா கொள்கை... இருக்கவே இருக்கு பல இஸம்.. அதான் தோழரே, ச்சே நண்பரே... கம்யுனிசம், சோசியலிசம், செக்கிலுகுற இஸம் இப்படி... இதில் எதுனா ஒன்ன உன்னோட கொள்கையா வச்சுக்கோ.. அலறாத பாண்டி, இதெல்லாம் அடுத்தவனுக்கு தான். இப்போ அமைப்பு, அலுவலகம், கொள்கை எல்லாமே தயார். அடுத்து கண்ணாடி வீடா பார்த்து கல் அடிக்கிற வேலை தான். இப்போ அம்பது ரூவா போட்டா அழகழகா நெம்பர் தர்றான். அதுல ரெண்டு வாங்கி வச்சுக்கோ. சத்தியமா அடுத்தவன் பேருல தான்.

இப்போ அட்டாக் வேலை ஆரம்பம். என்னதான் திராவிட கட்சிகளுக்கு கழுவி விட்டு (காலை தான்) பொழப்ப நடத்தினாலும் நம்ம கொள்கையால தான் உலகமே உசிரோட இருக்கு. ஒபமா அட்சி கூட நாங்க போட்ட பிச்சை. ஒசாமா எது செஞ்சாலும் எங்கள கேக்காம செய்யிறது இல்ல... சூரியன் உதிக்கிறது கூட நாங்க கை காட்டின திசையில்தான். அப்படி இப்படி நாலு வார்த்தையை போட்டு கிறுக்கி அதை நோட்டீஸ் போட்டு சுண்டல் விக்கிறவங்க கிட்ட குடுக்காம மத்த ஆளுங்க கிட்ட குடு.

நம்ம நாட்டுல இலுச்சவாயன் தமிழன் தான். எந்த ஊரு காரன் வந்து நம்ம ஊருக்காரன் வேட்டிய உருவினாலும் சரி கோவணத்தை உருவினாலும் சரி, அவன் தன்மானக்காரன் அதான் அப்படி செஞ்சான். இது மாதிரி நம்ம ஊர்காரன் எப்போ உருவ போறான் என்று சும்மா திகிலா நாலே நாலு போஸ்டர் அடிச்சு ஊரே தூங்கினதுக்கு பொறவு எங்கயாச்சும் கொண்டு ஒட்டிடு. அந்த போஸ்டர கழுதை கூட நெருங்க பயப்படும். அப்புறமா நீயே போய் அத தாறுமாற கிழிச்சு, நமக்கு பயந்தவன் எவனோ நடுராத்திரியில வந்து போஸ்டரை கிழிச்சுட்டான் என்று இன்னொரு போஸ்டர் அடிச்சு ஒட்டு.

அதே மாதிரி எங்க எவன் எது செஞ்சாலும், அது நல்லதோ கெட்டதோ அதுக்கு எதிரா அறிக்கை அடி. அப்போ தான் ஊருக்குள்ள எவனும் நம்ம அறிவுக்கு சமமா இல்ல என்று ஒரு சீன் போட முடியும். அப்படியே அந்த அறுவை இல்ல இல்ல அறிக்கை எல்லாம் ஒன்னு சேர்த்து ஒரு பத்திரிக்கை போடு... பத்திரிக்கையோட பேரு வெடிகுண்டு, ஆட்டம் பாம் இப்படி இருந்தா மேலும் சிறப்பு.

அறிக்கை என்ற பேருல சொறிஞ்சு விடுறவனுக்கு அரடிக்கெட், ஆப்பாயில், அழுகிப்போன முட்டை இப்படி பேரு வச்சா ரொம்ப சிறப்பா இருக்கும். அறிக்கையோட முடிவுல இது சம்பந்தப்பட்டவங்களுக்கு நாங்கள் குடுக்கும் மரண இடி... என்று மறக்காம சொல்லி கலகம் இல்ல இல்ல காமெடி பண்ணனும்.

தப்பி தவறி அந்த பத்திரிகைய காசுக்கு என்று சொல்லிராத.. அப்புறம் வர்றவன் போறவன் எல்லாம் கல்ல விட்டு அடிப்பான். ஆகவே இலவசமா குடுக்கணும். (குழந்தைக கக்கூஸ் போனா கண்டிப்பா நம்ம பத்திரிக்கைய தான் பயன் படுத்தனும் என்று பெருமையா கூட சொல்லிக்கலாம்).

இப்படி எல்லாம் செஞ்சா சீக்கிரம் நீயும் பெரிய மனுஷன் ஆகிடுவ. அப்புறம் 2011ல் அட்சி நமதே என்று கூட சந்தோசமா சொல்லிக்கலாம். என்ன நடந்தாலும் உன் நண்பனை மட்டும் மறந்துடாத. சீகிரமே என்ன பார்க்க வந்திடு.

இப்படிக்கு...
உனக்காக சுடுகாட்டில் குழி வெட்டி, நரகத்தில் இடம் பிடித்து காத்திருக்கும்...

திகில் தீச்சட்டிவாயன்.



கோவணத்துல ஒரு காசு இருந்தா.... என்ற பழமொழி தான் நினைக்க தோணுதுங்க... என்னவா.... தற்போது வளர்ந்து வரும் வருங்கால சூப்பர் ஸ்டார், எட்டாவது வள்ளல் தனது அடுத்த அடுத்த திட்டத்தை அறிவித்துள்ளார்...

அதாவது அவருக்கு என்று உலகம் முழுக்க ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கும் பணி.. ஆகவே நூறு பேர் கொண்ட குழுவா அவரை அணுகி ரசிகர் மன்றத்தை பதிவு செஞ்சுக்கிட்டா ருபாய் ஐந்து லட்சத்தை சுட சுட கைல குடுத்து திக்குமுக்காட வைகிறாராம். எதுக்கா? பின்ன மன்ற செலவுகளை கவனிக்க தான்.

அதோடு நில்லாமல் தனது ஒவ்வொரு பட ரிலீஸ் அன்றும் கோசம் போடும் கும்பலுக்கு ஸ்பெஷல் கவனிப்பு வேறு...

அரசியல் வாய்ப்பு பிரகாசமா இருப்பதால் தான் இந்த தடபுடல் ஏற்பாடு என்று இந்த செய்தியை சொன்ன நம்ம காரைக்குடி அண்ணாச்சி, ரசிகர் மன்ற திறப்பு வேளையில் ஐக்கியமானார்....

பொடியன்...